ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு…. ஆகஸ்ட் 4 ல் விசாரணை….!!!!!!!

அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுக தரப்பில் இருந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த  வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த சூழலில் அதிமுக பொது குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் அளித்த மனு வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி நீதிபதி கிருஷ்ண ராமசாமி முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.