ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக எம்பியை விரட்டியடித்த திமுகவினர்… பெரும் பரபரப்பு…!!!

துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதியில் திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டி அதிமுக எம்பி ரவீந்திரநாத் மீது திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவீந்திரநாத் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.