தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து ஓபிஎஸ் தாயாரின் இறப்புக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு நடிகர் விஜயகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் அறிக்கையில் “ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். தாயார் இறப்பு என்பது மிகப்பெரிய வலியாகும். அவரை இழந்து தவிக்கும் ஓபிஎஸ்-க்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.