அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று எடப்பாடி தரப்பு வாதங்களை கேட்டு எறிந்த நீதிபதிகள் இன்று ஓபிஎஸ் தரப்பு  வாதங்களை கேட்டறிந்தனர். இதில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக உறுப்பினர்கள் யாரும் என்னுடன் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவெடுத்ததுள்ளது என்று கூறினார். அதற்கு நீதிபதிகள் சிரித்தபடியே எந்த தொடர்பும் கூடாது என்றால் அது எந்த அளவிற்கு என்று கேட்டனர்.