ஓபிஎஸ் கோவத்துல இருக்காரு…. நேரம் வந்ததும் தூக்கிருவாரு…. புகழேந்தி பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக பொன்விழா ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டு புலி வேடம் போடும் எடப்பாடியிடமிருந்து அதிமுகவை மீட்போம். உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. திமுக தற்போது நல்லாட்சி கொடுத்து வருகிறது.

200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றும் தலைமை வாழ்த்து கூறாதது வருத்தமளிக்கிறது. அதிமுக திசை மாறிவிட்டது. சசிகலாவை அதிமுகவில் அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்ன உரிமை இருக்கிறது. வாரிசு அரசியல் செய்யலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி மீது கோபத்தில் இருப்பதாகவும், உரிய நேரம் வரும்போது எடப்பாடியை நீக்கிவிட்டு சசிகலாவுடன் இணைந்து வழி நடத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *