ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையிலான கருத்து வேறுபாடு…. பேசி தீர்த்துக்கோங்க…. காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்…..!!!!

தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ். அழகிரி இன்றுகாலை நிருபர்களிடம் பேசியதாவது, “அக்னிபாத் திட்டம் மோடி அரசின் மேலும் ஒரு கொடுமையான திணிப்பு ஆகும். இதையடுத்து சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ்சிடம் கொடுப்பதை ஏற்றுகொள்ளஇயலாது. இதனால் ஜனநாயக குரலை நெறிக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும். ஹிட்லர், முசோலினி ஆகிய சர்வாதிகாரிகள் போன்று தொண்டர்களிடம் ஆயுதம் கொடுக்க மோடி முயச்சிக்கிறார். இதனிடையில் காங்கிரஸ் பொதுத் துறையையும், தனியார் துறையையும் வளர்த்தது. ஆனால் பா.ஜ.க பொதுத் துறையை அழித்துவிட்டு தனியார் துறையை வளர்க்கிறது. பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் சிறந்த நண்பர்கள்.

ஆகவே அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்கவேண்டும். அ.தி.மு.க-வில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. தண்ணீர் பாட்டில் வீசியது ஆகிய சம்பவங்கள் நடந்து இருந்தால் வருந்ததக்கது. இதனிடையில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை. பேரறிவாளன் செய்த குற்றத்தை விடவும் நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்கறையும் விடுவிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க கொள்கையை முறையாக பின்பற்றி இருக்கின்றனர். திரௌபதி எனும் பெயருக்காகவே அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *