ஓட்டுனர் கூறிய அடையாளங்கள்…. காட்டுக்குள் தீவிர கண்காணிப்பு பணி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை, தேவன்-1 பகுதி முதுமலை போன்ற இடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக் கொன்றுவிட்டது. இதனால் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த எருமையை புலி அடித்து கொன்றுள்ளது. மேலும் சிங்கார மின் நிலையம் அருகில் அந்த புலி நடந்து சென்றதை வாகன ஓட்டுனர் ஒருவர் பார்த்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் கூறிய அடையாளங்கள் மூலம் அது தேடப்பட்டு வரும் புலி தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். அதன் பிறகு வனத்துறையினர் சிங்கார வனப் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வேட்டை தடுப்பு பிரிவினர் சிங்காரா வனப்பகுதிக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த புலியை சுட்டு பிடிக்க வேண்டாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதால் வனத்துறையினர் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *