ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் முன்… நுழைந்த பின்… என்ன செய்ய வேண்டும்?…!!?

தமிழகத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.

அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களுக்கு கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு வாக்காளரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். 6 அடி தனிமனித இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஒருவர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். வலது கையில் கையுறை அணிய வேண்டும்.