ஓட்டுக்கு பணம் கொடுத்த நிர்வாகிகள் ….. தட்டி தூக்கிய போலீஸ்….. அதிர்ச்சியில் பாமக, அதிமுக ..!!

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்கை பகுதியில் ஓட்டுக்காக பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த ஆளும் கட்சியான அதிமுக முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர் சதீஷ், ஓட்டுனர் பாபு ஆகிய 3 பேரை கைது செய்தனர்

அவர்களிடம் பூத் ஸ்லிப், வேட்பாளர் படம், கூட்டணி கட்சியான பாமக  தலைவர் டாக்டர் ராமதாஸ் படம் பொருந்திய துண்டு இருந்தது. மேலும் அவர்களிடம் இருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். சந்தேகத்தின் பேரில் பாமகவை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். இது குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் திரு. சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.