ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம்  2,50,053 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 69.82% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா 73,110 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.

மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. மோகன் 64,600 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட க.சுப்புலட்சுமி 22,413 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா தலா 8,510 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை திமுக கட்சியினர் ஊரடங்கு விதிமுறைகளுடன் பாதுக்காப்பாக தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *