ஓடி கொண்டிருக்கும் போதே…. மளமளவென பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நம்பம்பட்டி பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென இந்த காரில் இருந்து கரும்புகை வெளியானதால் அதில் சென்றவர்கள் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *