ஓடிபி மூலம் கொள்ளையா ? உடனே இத செய்யுங்க…!!

உலகிலேயே அதிகளவு இணையத்தை பயன்படுத்தும் நாடு இந்தியா. வளர்ந்த தொழில்நுட்பத்தை பலவகைகளில் பயன்படுத்தி பலன் அடையும் பலருக்கும் அதிலுள்ள குறைபாடுகள் முழுமையாக தெரிவதில்லை. அப்படி இருக்கும் குறைபாடுகளில் ஒரு பகுதியாக தொழில்நுட்ப ரீதியிலான ஆன்லைன் மோசடிகளில் பலரும் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தாலும் ஆங்காங்கே இது குறித்தான புகார்கள் மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் ஓடிபி மூலமாக கொள்ளை நடைபெறுகிறது என்ற செய்தி  தமிழகம் முழுவதும் மக்களை அதிர வைத்தது. அதன் ஒரு பகுதியாக ஓட்டி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க பட்டுவிட்டால் பதற்றம் வேண்டாம். உடனடியாக 15 52 60 என்ற எண்ணிற்கு அழையுங்கள் என தஞ்சை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி செய்தவர்கள்  வங்கிப் பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு freeze செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *