ஓடிடியில் பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள்… மோதிக்கொள்ளும் முன்னணி நடிகர்கள்…!!

சில முன்னணி கதாநாயகர்களின் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது . இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒடிடி தளத்தில் சில புதிய படங்கள் வெளியிடப்பட்டன . அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாரான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மற்றும் நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது .

ஓடிடியில் பொங்கல் ரிலீசுக்கு கடும்போட்டி

இந்நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி கதாநாயகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது . இதுவரை மாதவனின் ‘மாறா’ மற்றும் விஷாலின் ‘சக்ரா’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.