ஒவ்வொரு 4 நொடிக்கு ஒருவர் பட்டினியால் மரணம்….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

உலகில் ஒவ்வொரு நான்கு நொடிக்கு ஒருவர் பட்டினியால் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகில் உள்ள 200 தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். அதனைப் போலவே 345 மில்லியன் மக்கள் கடும் பசியில் உள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகளாவிய பசி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் 21ம் நூற்றாண்டில் மீண்டும் பஞ்சத்தை அனுமதிக்க முடியாது என்ற உலக தலைவர்கள் வாக்குறுதி அளித்தாலும் சோமாலியாவில் இன்று பஞ்சம் மீண்டும் நெருங்கி விட்டது.உலகம் முழுவதிலும் 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். அதிலும் 345 மில்லியன் மக்கள் தற்போது கடுமையான பசியை அனுபவித்து வருகிறார்கள்.இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. மேலும் பட்டினியால் நாள் ஒன்றிற்கு 19,700 பேர் இறப்பதுடன் ஒவ்வொரு நான்கு நொடிக்கும் ஒருவர் உயிரிழக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது.