ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் தரும்…. தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்…..!!!!

வங்கிகளில் நிலையான வைப்பு நிதித் திட்டம் (FD) இருப்பது போல, தபால் நிலையங்களில் மாதாந்திர வருமானத் திட்டம் (monthly income scheme) நல்ல லாபம் தருகிறது. இத்திட்டத்தில் ஐந்தே ஆண்டுகளில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. நீங்கள் சேமிக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சேமிப்புக் கணக்கை மூடவேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல, கணக்கு தொடங்கிய முதல் ஆண்டில் கணக்கை மூட முடியாது.

இத்திட்டத்துக்கான வட்டி 6.6 சதவீதமாக இருக்கிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சம் சேமிக்கலாம். இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையில் டெபாசிட் செய்ய முடியும். சிங்கிள் அக்கவுண்ட்டில் நீங்கள் குறைந்தது ரூ.4.5 லட்சம் சேமிக்க முடியும் என்பதால் 6.6 சதவீத வட்டியில் உங்களுக்கு மொத்தம் ரூ.29,700 வட்டி வருமானம் கிடைக்கும். ஒருவேளை ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் அதிகபட்சமாக நீங்கள் சேமித்தால் 6.6 சதவீத வட்டி வருமானத்தில் ரூ.59,400 வருமானம் கிடைக்கும்.

இத்திட்டத்தில் மொத்தம் ரூ.50,000 முதலீடு செய்தாலே உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,300 பென்சன் கிடைக்கும். அதேபோல, ரூ.1 லட்சம் சேமித்தால் மாதத்துக்கு ரூ.550 அல்லது வருடத்துக்கு ரூ.6,600 பென்சன் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்திருந்தால் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,475 பென்சன் வரும். மாதாந்திர வருமானத் திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று இந்த சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். அடையாள ஆவணம், முகவரிச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 போன்றவை தேவைப்படும். 1,000 ரூபாய் செலுத்தி நீங்கள் கணக்கைத் திறக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *