ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10,000… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. செல்போன் இல்லாத மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் எந்த வசதியும் இல்லாமல் சில கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் மாணவர்களின் நலனை கருதி மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அம்மாநிலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செல்போன் மற்றும் லேப்டாப் வாங்குவதற்கு அரசு சார்பாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் மொத்தம் 9.5 லட்சம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதன் மூலம் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு பயிற்சி பெறலாம் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.