ஒவ்வொரு போட்டியிலும் இதுதான் முக்கியம்…. -கேப்டன் கே.எல்.ராகுல்….!!!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்த நாட்டின் ஹராரே நகரில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் கே.எல்.ராகுல் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்துவீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது.

ஒவ்வொரு போட்டியின்போதும் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் முக்கியமான ஒன்றாகும். நாங்கள் பல்வேறு கிரிக்கெட் விளையாடுகிறோம். அப்போது காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும். நான் களத்தில் உள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டில் இருந்து விலகியிருப்பது கடினம் எனவும் அவர் கூறினார். நாங்கள் இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு மீண்டுமாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து விளையாட விருப்பப்படுகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *