ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும்… “வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கும் காதல் ஜோடிகள்”… வெளியான தகவல்…!!!!

பீகாரில் கடந்த சில மாதங்களாக தங்கள் பெண் குழந்தைகள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக புகார் அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் சிறுமிகள் கடத்தப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களாகவே விருப்பப்பட்டு காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது போலீசாரின் அறிக்கையை நம்பினால் கடந்த ஆறு மாதங்களில் பீகாரில் இது போன்ற 1870 சிறுமிகள் திருமணத்திற்காக மோடி போனதாக வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

இதில் ஜனவரி மாதத்தில் 240 வழக்குகளும், பிப்ரவரி மாதத்தில் 247 வழக்குகளும், மார்ச் மாதத்தில் 297 வழக்குகளும், ஏப்ரல் மாதத்தில் 330 வழக்குகளும், மே மாதத்தில் 383 வழக்குகளும், ஜூன் மாதத்தில் 373 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை தினசரி அடிப்படையில் பார்த்தால் பீகாரில் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளது. அதே சமயம் இந்த வருடம் அதாவது 2022 இதுவரை 2778 இளம் பெண் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி இந்த வழக்கில் பீகார் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2020ல் 538 சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் 2021 இல் 6589 வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

முன்பெல்லாம் ஆண்கள் பெண்களுடன் ஓடி வந்த நிலையில் தற்போது பெண்கள் தன் காதலனுடன் ஓடுகிறார்கள். காதலனுடன் ஓடிப் போய் விட்டதாக காதலி முன்வந்து வெளிப்படையாக அறிவிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பீகாரில் கடந்த 2015 ஆம் வருடம் காதல் மற்றும் திருமணம் ஆகிய நோக்கத்தில் கடத்தப்பட்ட தாக 4229 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் 2016ல் இந்த வழக்குகள் 4652 ஆக அதிகரித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து 2017 ஆம் வருடம் கடத்தல் வழக்குகள் அதிகரித்து 6217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2017ஆம் வருடத்தை விட 2018 ஆம் வருடம் 2000 வழக்குகள் அதிகரித்து சுமார் 8000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.