ஒவ்வொரு ஆண்டும்…. சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா…? வாங்க பார்க்கலாம்….!!!!

இந்திய நாட்டின் மிக பாரம்பரியமான யோகாசனம் வெளிநாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த மக்களும் யோகாசனத்தை முழுமையாக கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளனர். உடல், மனம் ஆகிய இரண்டுமே ஒருங்கிணைந்து செயல்பட உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, நோய்களை தடுக்க என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.

யோகா பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் 2014ஆம் வருடம் ஐக்கிய ஜூன் 21ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யோகா என்பது ஒன்றிணைத்தல் அல்லது ஒருமுகப்படுத்துதல் என்று பொருள்படும். யோகாசன பயிற்சிகள் எட்டு பாகங்களாக அதாவது அங்கங்களாக பிரிக்கப்படுகிறது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தம், மன சோர்வு, படபடப்பு, இளம் வயதிலேயே உடல் பருமன் குறைபாடு ஆகியவை பரவலாக காணப்படுகிறது. வாழ்க்கைமுறை நோய்களும் அதிகரித்து வருகிறது. தற்போது உலக அளவில் ஏராளமானவர்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்கு உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் காரணம் என்று கூறப்படுகிறது. யோகா செய்யும் போது ஹோலிஸ்டிக் ஹெல்த் எனப்படும் தலை முதல் கால் வரை உடலும் மனமும் ஆரோக்கியம் அடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *