ஒலிம்பிக் ஹாக்கி: 41 ஆண்டுகளுக்கு பின்…. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி…!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி, பிரிட்டன் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *