ஒற்றை கையை இழந்த நம்பிக்’கை’ முதியவர்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

ஸ்ரீ ராமன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். 80 வயதுடைய  இந்த முதியவர், தனது ஆரம்பகட்ட வாழ்க்கையில் தனியார் பேருந்து ஒன்றில்  நடத்துனராக இருந்துள்ளார். அதன் பின் எதிர்பாராத விதமாக  நடந்த ஒரு விபத்தில், இவரது வலது கையானது உண்டானது. இதையடுத்து இவருக்கு அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர் வேலை ஒன்று கிடைத்துள்ளது.

இதன் பின் 37 ஆண்டு காலம் இந்த முதியவர், அந்த ஒற்றை கையோடு போஸ்ட் மாஸ்டர் வேலையை செய்து வந்துள்ளார். இதன் பிறகு, தற்போது பணி ஓய்வும் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடைய மகளுக்காக கோவையில் உள்ள தடாகம் என்ற பகுதியில் குடிப்பெயர்ந்துள்ளார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும், உழைக்க வேண்டும் என்று விடாமுயற்சியோடு இந்த முதியவர் தள்ளாத வயதிலும் மற்றும் ஒற்றை கையுடனும் சைக்கிளில் பயணித்து கொரியரை விநியோகம் செய்துள்ளார்.

மேலும் இது குறித்து அந்த முதியவர் கூறியுள்ளதாவது, தம் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், காலை 5 மணிக்கு எழுந்து சமையல் செய்து வைத்துவிட்டு, மேலும் மனைவியை சாப்பிட வைத்து மற்றும் மருந்தும் கொடுத்து விட்டு, காலை 11 மணிக்கு, பணிக்கு வருகிறேன் என்றும்  கூறியுள்ளார். இதையடுத்து மாதந்தோறும் தனது மனைவிக்காக 6,000 ரூபாய்க்கு மாத்திரை வாங்கி கொடுக்க வேண்டும். இந்நிலையில் கொரியர் நிறுவனத்தின் மூலம், ரூ. 7500 மாத வருமானமாக கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த முதியவர், நாள் ஒன்றுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் கோவையை வலம் வருகிறார். இவ்வாறு 80 வருடம் 8 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில்,  தேனீக்களைப்போல இன்னும் சுறுசுறுப்பாக  இயங்குகிறார். மேலும் வயது ஒரு பொருட்டல்ல உடலில் வலு இருக்கும் வரை உழைப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *