ஒற்றுமை உணர்வு: இதுதான் நம்மை எப்போதும் காப்பாற்றும்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!

தென் இந்திய திருச்சபைகளின் பவளவிழா சென்னை வானகரத்திலுள்ள இயேசு அழைக்கிறார் அரங்கத்தில் நடந்தது. இவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். 75-வது பவள விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மேடையில் கிருத்துவர்களுடன் கேக்வெட்டி பயனாளிகளுக்கு, காது கேட்கும் இயந்திரம், தையல் மிஷின் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் 5000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “நான் இல்லாமல் நீங்கள் இல்லை, நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்பதன் அடையாளமாக இந்நிகழ்வு இருக்கிறது. தென் இந்திய திருச்சபையின் பவள விழா தொடக்க விழாவில் சென்ற வருடம் நான் பேசினேன். இன்று நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளேன். பல மாநிலங்களில் மட்டுமின்றி இலங்கை நாட்டிலும் தென்னிந்திய திருச்சபை செயல்படுகிறது.

மொத்தம் 40 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். காரணம் ஒற்றுமை உணர்வு தான் என்று முதல்வர் குறிப்பிட்டார். அந்த ஒற்றுமைஉணர்வு தான் நம்மை எப்போதும்,என்றும் காப்பாற்றும் ஒன்றாகும். ஒற்றுமை எண்ணத்தோடு அனைவரும் இருக்குமேயானால் நாடு அமைதி பூமியாக விளங்கும் என்பதில் ஒருதுளி அளவும் சந்தேகமில்லை. இந்தியா பல மதத்தினர் வாழும் நாடாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஒற்றுமையாக வாழ்கிறோம்.