ஒரே மொபைல் எண் மூலம்…. வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் PVC ஆதார் கார்டு…. எப்படி விண்ணப்பிப்பது?….!!!!

நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். இது ஒரு முக்கிய ஆவணம். இது இல்லாமல் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் நம்மால் பெற முடியாது. ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த வருடம் PVC ஆதார் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதனை பராமரிப்பது எளிதானதாக இருப்பதுடன் அதை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் வைத்துக்கொள்ள முடியும். இதுவரை ஆதார் அட்டை காகிதம் மூலமாக அச்சிடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது ஆதார் அட்டையில் டிஜிட்டல் வடிவத்திற்கு UIDAI ஒப்புதல் அளித்திருக்கிறது.

அதன்படி ஆதார் அட்டையை நமது மொபைல் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதனை தேவைப்படும்போது பயன்படுத்தலாம். டிஜிட்டல் ஆதார் அட்டைக்கு பிசிகல் அட்டையை போலவே அனைத்து அங்கீகாரமும் கிடைக்கும். ஒரே மொபைல் என்னுடன் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC ஆதார் அட்டை எண் உருவாக்கலாம். அதன் அளவை ஏடிஎம் டெபிட் கார்டு போன்றுதான் இருக்கும். அதனை எளிதாக பாக்கெட்டில் அல்லது பணப்பையில் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு வெறும் 50 ரூபாய் என்ற சிறிய கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *