கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரு வேறு தம்பதியினர் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அதன் பிறகு பெட்ரோல் நிரம்பியதும் பைக்கில் ஏறு என்று தன்னுடைய மனைவியை அழைத்துள்ளார். அவர்கள் பைக்கில் வீட்டிற்கு சென்றவுடன் மனைவி இது நம்ம வீடு இல்லை என்று கூறுகிறார்.

அந்த நபர் குரலைக் கேட்ட உடன் அதிர்ச்சியாகியுள்ளார். அதாவது தன்னுடைய மனைவியை போன்று வேறொருவர் மனைவி ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் அவரை தன் மனைவி என நினைத்துக் கொண்டு அதன் நபர் பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்கு சென்ற பிறகு தான் அது அவருடைய மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒரே மாதிரியான ஹெல்மெட் அணிந்திருந்ததால் இப்படி ஒரு குழப்பம் நேர்ந்துள்ளது.