தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா, தசாவதாரம், வரலாறு மற்றும் நாட்டமை போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களில் நடித்து வருவதோடு படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அந்த வகையில் கே.எஸ் ரவிக்குமார் தற்போது ஹிட் லிஸ்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் கனிஷ்கா மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கே.எஸ். ரவிக்குமார் ஹிட் லிஸ்ட் பட குழுவுடன் மரியாதை நிமித்தமாக நடிகர்கள் ரஜினி, விஜய், கமல், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரை சந்தித்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை கே.எஸ் ரவிக்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.