நம்முடைய பூமி உட்பட அனைத்து கோள்களும் சூரியனை வானில் சுற்றி வருகிறது. இப்படி கிரகங்கள் சுற்றி வரும் போது அவற்றை நம் பூமியிலிருந்து ஒரே நேர்கோட்டில் பார்க்கும் அரிய வாய்ப்பு சில நேரங்களில் கிடைக்கிறது. அப்படிப்பட்ட நிகழ்வு தான் தற்போது நடைபெற உள்ளது. அதாவது பொதுவாக 3 அல்லது 4 கோள்கள் தான் ஒரே நேர்கோட்டில் வரும். ஆனால் தற்போது 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வர இருக்கிறது. அதாவது யுரேனஸ், நெப்டியூன், செவ்வாய், சனி, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்கள் தற்போது ஒரே நேர்கோட்டில் தென்படுகிறது.

இவற்றை காண்பதற்கான ஏற்பாடுகள் இன்று முதல் வருகிற 25-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அறிவியல் அமைப்புகளால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் வியாழன், வெள்ளி, சனி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை ஒரே நேர்கோட்டில் காணலாம். மற்ற கோள்களை சக்தி வாய்ந்த தொலைநோக்குகளால் தான் காண முடியும். மேலும் இந்த நிகழ்வை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இன்று முதல் வருகிற 25ஆம் தேதி வரை தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்க்கலாம்.