ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் ..!! டிஜிபி திரிபாதி உத்தரவு ..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 8 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், தூத்துக்குடி என்ஐபி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்ஐபி சிஐடியாக பணியாற்றிய முரளிதரன், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணிபுரிந்த முத்தமிழ் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

transfer க்கான பட முடிவு

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சகாயஜோஸ் சென்னைக்கும், தூத்துக்குடி மாவட்ட அமலாக்கபிரிவு டிஎஸ்பி சின்ராம் சென்னை காவலர் பயிற்சி பள்ளிக்கும், நிலமோசடி தடுப்பு டிஎஸ்பி பால்துரை, சாத்தான்குளம் டிஎஸ்பியாகவும்  பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயக்குமார் மதுரைக்கும், சாத்தான்குளம் டிஎஸ்பியாக பணியாற்றிய பாலச்சந்திரன் மதுரை சிபிசிஐடிக்கும்,  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.