ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு…. இந்த மாணவர்களுக்கு பொருந்தாது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படித்துக் கொள்ள முடியும்.இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் திட்டம் பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.

அதாவது பிஎச்டி படிப்பை தேர்வு செய்த மாணவர்கள்,அவர்கள் தேர்வு செய்த துறையில் தனித்துவமான அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதாலும் அவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை தொடர முடியாது என விளக்கம் அளித்துள்ளது.