ஒரே நேரத்தில் 2 டிகிரி…. இவர்களுக்கு மட்டும் பொருந்தாது…. யுசிஜி அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலமாகவோ, ஆன்லைன் கல்வி மூலமாகவோ அல்லது பகுதி நேரமுறை மூலமாகவோ தொடர முடியும் என்று பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்தது.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் அந்த திட்டமானது Phd மாணவர்களுக்கு மட்டும் பொருந்தாது என்று யூசிஜி அறிவித்துள்ளது. Phd படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் தனித்துவமான அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.