கர்நாடக மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (24), பிந்து (21), சந்தனா (18) ஆகியோரின் பெற்றோர் பல வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டன. இதனால் இவர்களின் பாட்டி இவர்களை கவனித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரும் உயிரிழந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து மூவரும் மிகுந்த சோகத்தில் இருந்தனர். கடந்த வியாழக்கிழமை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டில் மேற்கூறையை அகற்றி பார்த்த போது மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.