பாகிஸ்தான் நாட்டில் ஹைபர் பக்துங்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். இது குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் தீவிரவாதிகள் வாகனம் மூலமாக டேங்க் என்ற இடத்திற்கு தப்பிச்செல்ல முயற்சித்தனர். இதனை அறிந்த பாதுகாப்பு படையினர் வழியிலேயே அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.