ஒரே நாளில் 367 பேருக்கு நோய் தொற்று… முகக்கவசம் காட்டாயமாக அணிய வேண்டும்… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

நாமக்கல்  மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,232 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,609 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாளில் அதிகபட்ச பாதிப்பாக 361 ஆக இருந்த நிலையில் தற்போது அதையும் தாண்டி 367 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது.

மேலும் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15,298 பேர் நோய் பாதிப்பிலிருந்து பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 2ஆம் அலையை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்றும்  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *