தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜயின் வாரிசு, துணிவு திரைப்படங்கள் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தல மற்றும் தளபதி திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் மோதல் போக்கு நிலவியது. அதோடு துணிவு கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 62 மற்றும் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படங்கள் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.