ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி…. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்….!!!!!

நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத் தன்மை உடையவர் ஸ்ருதிஹாசன். தற்போது  ஸ்ருதிஹாசன் தென் இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, லாபம் உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகிவரும் 2 தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

அதாவது, சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் “வால்டேர் வீரய்யா” படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் “வீரசிம்ஹா ரெட்டி” திரைப்படத்திலும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த 2 படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி விடுமுறை தினம் அன்று வெளியாகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.