இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவர் நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்துவதற்காகவும் முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும் செல்வதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் சுற்றுலா செல்கிறார் என்றும் பலவாறு விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தேசிய பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்ட போது இந்தியாவில் கணினி தொழில்நுட்பம் மற்றும் செமி கண்டக்டர் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அமெரிக்காவுடன் மேம்பட்ட படையினர் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் விதமாக புதிய ஹெலிகாப்டர் அந்நாட்டிடம் இருந்து வாங்கப்படும்.
அதன் பிறகு பிரான்ஸுடன் சுமார் 7,90,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 26 ரஃபேல் விமானங்கள் உட்பட பல்வேறு போர் ஆயுதங்கள் வாங்கப்படும். இதனையடுத்து சவுதி அரேபியாவுடன் எரிசக்தி துறையில் இந்தியாவின் நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு ஈரானுடன் சகார் துறைமுக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு வணிக வழிகளை மேம்படுத்த முடியும். அதோடு நாட்டின் பிராந்திய மேலாண்மை திறன்களையும் வலுப்படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும் உதவும்.
இதனையடுத்து இஸ்ரேலுடன் குவாண்டம் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைக்கு பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆசிய நாடுகளுடன் இணைப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது Act East கொள்கைகளை வலுப்படுத்தி வணிக உறவுகளை மேம்படுத்தும். மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக பாஜக ஒரு முழு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் பிரதமர் மோடியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
View this post on Instagram