ஒரே இரவில் 8MLA காலி…. நச்சுனு உதவிய காங்கிரஸ்… இனி பாஜக காலம் தான் போல …!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்த்தில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் ஸ்பீக்கருக்கான தேர்தல் நடந்தது, பாரதிய ஜனதா கட்சியினுடைய ராகுல் நவ்ரேக்கர் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்பீக்கரை ஆதரித்து 164 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தார்கள், ஸ்பீக்கரை எதிர்த்து 107 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள்.

அடுத்த நாள் நேற்று மகாராஷ்டிராவில் முதலமைச்சருக்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் நடந்தது.அதற்கு முன் தினம் ஸ்பீக்கர் காண 164 பேர் ஆதரவு தெரிவித்தார்கள். நேற்று நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய துணை முதல்வர் தேவேந்திர பட்னவேஸ்  அவர்கள் சிவசேனாவின் உடைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு அதே 164 பேர் ஓட்டு போட்டார்கள். அது விஷயம் கிடையாது, எத்தனை பேர் எதிர்த்து ஓட்டு போட்டார்கள் என்று பார்க்க வேண்டும்.

அதற்கு முன்தினம் ஸ்பீக்கரை எதிர்த்து 107 பேர், ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நம்முடைய அரசை எதிர்த்து 99 பேர், ஒரே இரவில் இன்னும் எட்டு பேர் காலி.எட்டு பேர் எங்கே போனார்கள் ? இரண்டு காங்கிரஸ்காரர்கள் இதெல்லாம் முடிந்த பிறகு சட்டமன்றத்திற்குள் வருகிறார்கள், வருவதற்கு சிறிது தாமதமாகிவிட்டது சாரி என்று. அதிலே வந்தவர்களில் காங்கிரசினுடைய முன்னாள் முதலமைச்சர் மகாராஷ்டிராவின் உடைய அசோக் சாவனும் அவர்கள்,

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு காங்கிரசினுடைய முன்னாள் அமைச்சர் அவர்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறார், அதுவும் நம்பிக்கை இல்லா தீர்மானம் முடிந்து போன பிறகு… நேஷனலிஸ்ட் காங்கிரஸ் பார்ட்டி சரத் பவார் கட்சியினுடைய 7 எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வரவில்லை. அதனால் எங்களிடம் ஒரு ஏக்நாத் ஷிண்டே இல்லை பாருங்கள், இன்னும் ஒரு மாதத்தில் என விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *