ஒரு வாரமாக தேடிய உறவினர்கள்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

வெளியே சென்ற முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சின்னசாமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கடந்த ஒரு வாரமாக சின்னசாமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அயினாபுரம் சாலையில் இருக்கும் ஓடை தண்ணீரில் அழுகிய நிலையில் சின்னசாமியின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சின்னச்சாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *