அமெரிக்காவில் தவறான சிகிச்சையால் ஒருவரின் ஆணுறுப்பு சேதமடைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்டவருக்கு 3,400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு சோர்வு மற்றும் எடை குறைவு போன்ற பிரச்சனைகளால் அந்த நபர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு தற்போது 66 வயது ஆகிறது. அந்த சமயத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விறைப்புத்தன்மை பிரச்சனை இருப்பதாக கூறி தவறான சிகிச்சை வழங்கியுள்ளனர்.

அந்த நோயாளிக்கு ஒரு வாரத்தில் பலமுறை விறைப்புத்தன்மையை சரி செய்ய ஊசி போட்டுள்ளனர். இதன் காரணமாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆண் குறி மிகவும் மோசமடைந்து சேதடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டது உண்மை என நிரூபிக்கப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்ட அந்த 66 வயது முதியவருக்கு 3400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.