திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்னும் பகுதியில் 30 வயதில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில் வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவது வழக்கம். அதைப்போல் அவர் விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது பஸ்ஸில் அவருடன் பயணித்துக் கொண்டிருந்த திருச்சி ரயில்வே காவல்துறை அதிகாரி சதீஷ் ராஜா என்பவர் தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். நாம் இருவரும் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளோம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின் இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு செல்போன் நம்பரை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். இவர்களது நட்பு செல்போன் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ நாளன்று காவல் அதிகாரி அந்த செவிலியரை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் செவிலியருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதன்பின் மயக்கமடைந்த அவரை அந்த அதிகாரி ஹோட்டல் ரூம் ஒன்று புக் செய்து அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த அதிகாரி அவரது செல்போனில் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து கொண்டுள்ளார். பின் இந்த வீடியோவை வைத்து அவர் பலமுறை அந்த செவிலியரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செவிலியர் இச்சம்பவத்தை பற்றி அவரது கணவரிடம் கூறியுள்ளார். அதன்பின் இருவரும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட செவிலியர் மகளிர் காவல் நிலையத்தில் இச்சம்பவத்தை பற்றி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை தேடி வருகின்றனர்.