ஒரு பேராசிரியர் இப்படியா நடந்துக்கணும்?…. கடுப்பான மாணவன் சரமாரி கேள்வி…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

சமூகத்தில் கறையேறியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை படம் பிடித்து காட்டும் அடிப்படையில், ஒரு வீடியோ இப்போது வைராலாக பரவி வருகிறது. வீடியோவில் பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகி இருக்கிறது. அந்த பேராசிரியர் வகுப்பிலிருந்த அந்த மாணவனிடம் பெயரை கேட்டுள்ளார். இதையடுத்து இஸ்லாமிய மாணவரான அவர் தன் பெயரை கூறியுள்ளார். உடனடியாக  ஓ… நீ கசாபா.? (மும்பை தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்றவர்) என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அதாவது “பயங்கரவாதி” என்ற பொருளில் அம்மாணவனை அழைத்துள்ளார்.

இதன் காரணமாக அந்த மாணவன், நீங்கள் எப்படி என்னை அப்படி சொல்லி அழைக்காலம் என பேராசிரியை கேட்டுள்ளார். அப்போது பேராசிரியர் “நீ எனது மகன் போன்றவன். விளையாட்டுக்காக அவ்வாறு கூறினேன்”என்று சொன்னார். ஆனால் அந்த மாணவன் “இது விளையாட்டான காரியமில்லை. இந்நாட்டில் இஸ்லாமியனாக இருப்பதும், இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பதும் விளையாட்டு இல்லை. உங்களது மகனை அப்படி அழைப்பீர்களா?.. நீங்கள் போராசிரியர் பாடமெடுக்கும் இடத்தில் இருக்குறீர்கள்” என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்.

அதன்பின் அந்த பேராசிரியர் தொடர்ந்து மாணவனிடம்  மன்னிப்பு கேட்டார். எனினும் மாணவர் மன்னிப்பு கேட்பது என்பது இந்த சீர்க்கேட்டை சரிசெய்யாது. அந்த வகுப்பிலிருந்த மாணவர்கள் வகுப்புக்கு பிறகு அந்த மாணவனுக்கு ஆதராவாக துணை நின்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்போது இந்த வீடியோ வைரலானதை அடுத்து பெரும் விவாதம் கிளம்பி இருக்கிறது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அந்த பேராசிரியரை இடைநீக்கம் செய்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பா.ஜ.க ஆளும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.