“ஒரு நாள் தனிமையில் இருக்க வேண்டும்” திருமணமான பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலதிபர் கைது….!!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பாலவிளை பகுதியில் தொழிலதிபரான எட்வின்சன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவரது தொழில் நிறுவனம் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 28 வயதுடைய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எட்வின்சன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட எட்வின்சன் “உன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்” இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் தனது கணவரிடம் நடந்துவற்றை கூறி கதறி அழுதார்.

இதனால் இளம்பெண்ணின் கணவர் செல்போன் மூலம் எட்வின்சனை தொடர்பு கொண்டு தட்டி கேட்டபோது அவர் மிரட்டுவது போல பேசியுள்ளார். மேலும் வெளியே சொன்னால் உங்களுக்கு தான் அவமானம் என கூறியுள்ளார். இதனை அடுத்து புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் எட்வின்சனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.