தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது விடுதலை என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு குறும்பட பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவர் பேசியதாவது, இதயம் மட்டும் பிறப்பதற்கு முன்பாகவே துடிக்க ஆரம்பித்து விடுகிறது.

உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டுமே பிட்னஸ் கிடையாது. வாழ்க்கை முறையிலும் ஆரோக்கியம் தேவை. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு நாளைக்கு 70 சிகரெட் வரை பிடிப்பேன். அதன்பிறகு இயக்குனராக மாறிய காலத்தில் ஒரு நாளைக்கு 180 சிகரெட் வரை பிடிப்பேன். ஆனால் இது தவறு என உணர்ந்ததால் மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த பழக்கத்தை விட்டு விட்டேன். மேலும் இனிவரும் காலத்திலும் என்னுடைய படங்களில் சிகரெட்பிடிப்பது  மற்றும் மது அருந்தாத  காட்சிகள் இடம்பெறாத அளவுக்கு முடிந்தவரை தவிர்ப்பேன் என்று கூறியுள்ளார்.