ஒரு நாய்க்கும், யானைக்கும்…. இப்படி ஒரு பாசமா….? சகோதரர்கள் போல இருக்கார்களே….!!!

சவுத் ஆப்பிரிக்காவில் கடந்த 1983-ம் ஆண்டு தந்தத்திற்காக ஒரு யானை கூட்டம் வேட்டையாடப்பட்டுள்ளது‌. அந்த வேட்டையாடுபவர்களிடமிருந்து பபுல் என்ற ஒரு குட்டி யானை மட்டும் எப்படியோ தப்பித்து விட்டது. பொதுவாக யானைகளுக்கு ஞாபகசக்தியும் பாச உணர்வும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பபுல் தன்னுடைய குடும்பத்தை நினைத்து மிகுந்த கவலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 25 வருடங்களாக அந்த குட்டியானை யாரிடமும் சேராமல் தனிமையிலேயே இருந்துள்ளது. இதனால் வனத்துறையினர் பபுல் இடம் மாறினால் அது தனிமையிலிருந்து விடுபட்டு மற்ற யானைகள் போன்று சாதாரணமாக இருக்கும் என எண்ணியுள்ளனர்.

இதனால் கடந்த 2007-ம் ஆண்டு சவுத் கரோலினாவில் இருக்கும் ஒரு வனவிலங்கு காப்பகத்தில் பபுலை கொண்டு விட்டுள்ளனர். ஆனால் அங்கும் பபுல் தனிமையில் தான் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென பபுல் ஒரு நாயுடன் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று வனத்துறையினருக்கு தெரியவில்லை. மேலும் தன்னுடைய யானைக் கூட்டங்களுடன் கூட சேராமல் தனிமையில் வாழ்ந்த பபுல் திடீரென ஒரு நாயுடன் நெருங்கி பழகியதைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *