பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு 75,021 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உங்களுடைய வீட்டு மாடிகளில் சூரிய மின் தகடுகளை பொருத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டிலும் சோலார் பேனர்கள் அமைக்க https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.