ஒரு கிலோ ஸ்வீட் ரூ.9,000…. இதை வாங்க ஆர்டர்கள் குவிகிறதாம்… இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா…?

வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் முன்னிட்டு 9 ஆயிரம் மதிப்புள்ள இனிப்பை செய்துள்ளனர். இதை வாங்குவதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர்.

வட இந்தியாவில் மிகப் பிரபலமான பண்டிகை ரக்ஷா பந்தன். இந்த பண்டிகையில் சகோதரிகள், தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி மிக விமர்சையாக கொண்டாடுவார்கள். இதனால் வட இந்தியாவில் இனிப்புகளின் விலை விண்ணைத் தொட்டு வருகின்றது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புகளை விநியோகம் செய்யும் கடை 24 கேரட் தங்க இலைகள் பூசப்பட்ட இனிப்பை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த இனிப்பு கிலோ 9 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த இனிப்பை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வாங்கி தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுப்பதற்காக மக்கள் ஆர்டர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *