ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளி…. அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டது. தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த செப்.1ந்தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இதனிடையே கடந்த மாதம் 1ந்தேதி 1 முதல் 8ந்தேதி வரை பள்ளிகள் தொடஙகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வரும் 6-ந்தேதி முதல் 1 ஆம் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயங்கும். வகுப்புகளுக்கு மாணவர் வருகை கட்டாயம் இல்லை என்றும் பெற்றோர்கள் அனுமதியுடன் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *