ஒருநாள் தொடரில்…… 300க்கும் மேல் அடித்த….. “டாப் 5 அணிகள் எது?”….. வாங்க பார்க்கலாம்..!!

இதுவரையில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக முறை 300க்கும் மேல் அடித்த அணிகளின் விவரங்களை பார்ப்போம்..

நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கிரிக்கெட் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடராக உருவானது.
19ஆம் நூற்றாண்டில் பிரபலமான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல ஆண்டுகளாக நடைபெற்றது. ஆனாலும் 5 நாட்கள் முடிவடைந்த பின் ரிசல்ட்டை கொடுக்காமல் டிராவில் முடிவு அடைவதன் காரணமாக ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.. இதையடுத்து ரசிகர்களை கவர்வதற்காகவே 60 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் தொடராக கிரிக்கெட் உருவானது. நாட்கள் செல்ல செல்ல அது அப்படியே 50 ஓவராக குறைக்கப்பட்டது. இந்த தொடர் மிகவும் வரவேற்பை பெற்றது. 90களில் ரசிகர்களின் பிடித்த விளையாட்டாக மாறிப்போன ஒரு நாள் கிரிக்கெட் தற்போது விஸ்வரூபம் அடைந்துள்ளது. இதனை அடுத்து 20ஓவர் கிரிக்கெட்டும் காலப்போக்கில் உருவானது.

இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வந்தபின் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் அழிந்து போகும் என்று தான் சிலர் நினைத்தனர்.. ஆனால் அப்படி இல்லை.. அதிரடி தொடரான டி20 மற்றும் பொறுமையாக ஆடும் டெஸ்ட் 2க்கும் மத்தியில் நிற்கும் இந்த 50 ஓவர் கிரிக்கெட் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டினாலும், கடைசியில் அதிரடியை  வெளிப்படுத்தும் ஒரு சிறந்த தொடராக 2 கிரிக்கெட்டும் சேர்ந்த கலவையாக இருக்கிறது. எனவே இதனால் இந்த 50 ஓவர் தொடருக்கான தரம் குறையவில்லை என்பதே உண்மை.

என்னதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டி20 உலக கோப்பை என்று வந்தாலும் கிரிக்கெட்டின் சாம்பியனை இந்த 50 ஓவர் கிரிக்கெட் தொடரை மையப்படுத்திய உலக கோப்பையில் இருந்து தான் நாம் தேர்வு செய்கின்றோம். எனவே ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு தனி மவுசு இருக்கிறது. ஏனென்றால் கண்டிப்பாக ஒவ்வொரு அணியும் வெற்றி பெற வேண்டுமென்றால் 300 ரன்களை அடிக்க வேண்டும் என்று கட்டாயமாகிறது.

அந்த காலத்தில் எல்லாம் 60 ஓவர்களில் இருந்த போது 200 ரன்கள் அடிப்பதற்கே மிகச் சிரமம். ஆனால் 90களில் சேவாக், ஜெயசூர்யா, கில் கிறிஸ்ட் ஆகிய உலக தரமாய்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் 200 – 300 போன்ற ரன்களை எளிதாக அடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்கள்.

அதன்பின் எளிதாக கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே 300 ரன்களை தொடுகிறது. இதையடுத்து 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகையினால் அனைத்து அணிகளுமே 200 ரன்களை ஈசியாக எடுத்து விடுகிறது. இருப்பினும் 50 ஓவர் தொடரில் இங்கிலாந்து போன்ற அணிகள் அசால்டாக 400 ரன்களை அடிப்பதை எல்லாம் நம்மால் பார்க்க முடிகின்றது. இருப்பினும் அனைத்து அணிகளாலும் 400 ரன்களை அடிக்க முடியாது என்றாலும் கூட 300 என்ற ரன்களை அனைத்து அணிகளுமே அடிக்கக்கூடிய ஒரு இலக்காகவும், வெற்றிக்கு போராடும் தைரியத்தை கொடுக்கின்ற நல்ல ரன்களாகவும் இருக்கிறது.

ஆனால் இப்போதும் கூட 300 ரன்களை அடிப்பதற்கு சவாலாக தான் இருக்கிறது. ஏனென்றால் பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் 300 ரன்களை அடிப்பது எல்லாம் அவ்வளவு எளிது கிடையாது. 300 அடிக்க வேண்டும் என்றால் ஒரு அணியில் ஒருவர் சதம், 2 – 3 பேட்ஸ்மேன்கள்  அரைசதம் அடிக்க வேண்டும்.. அப்படி அடித்தால் 300 எளிதாக வந்துவிடும். இல்லை என்றால் 3- 4 பேட்ஸ்மேன்கள் 2 அரை சதம்,  40 மற்றும் 70 என்பது போல ரன்கள் அடிக்க வேண்டும்.. எனவே அனைத்து போட்டியிலும் 300 ரன்கள் எடுப்பது  என்பது கடினம் தான். அந்த வகையில் இது நாள் வரையில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த டாப் 5 அணிகளை பற்றி இப்போது பார்ப்போம்.

 5ஆவது இடத்தில் இங்கிலாந்து : 84

2015 க்கு பின் அசால்ட்டாக 400 ரன்கள் அடிக்கும் அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதற்கு சான்றாக சமீபத்தில் நடந்த நெதர்லாந்துக்கு எதிராக 498 ரன்களை அசால்டாக அடித்து உலக சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் ஜாஸ் பாட்லர், ஜானி பேர்ஸ்டோ போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் வருகையின் காரணமாக இப்போதெல்லாம் அசால்டாக 300க்கு மேல் ரன்களை அடித்து அசத்துகிறது அந்த அணி.. மொத்தமாக 84 போட்டிகளில் 300ஐ கடந்துள்ளது. அதில், 59 வெற்றிகளை வசமாக்கியுள்ளது. 23 முறை தோல்வியை பதிவு செய்துள்ளது.

4ஆவது இடத்தில் பாகிஸ்தான் : 86

அந்த காலத்தில் இன்சமாமுல் ஹக், சாஹித் அப்ரிடி மற்றும் யூனிஸ்கான் போன்ற தரமான வீரர்களில் சிறப்பான ஆட்டத்தால் அதிக போட்டிகளில் 300 ரன்கள் குவித்த பாகிஸ்தான் சமீபகாலமாக அதை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால் பாகிஸ்தான் 4ஆவது இடத்தில் தற்போது நீடிக்கிறது. இதுவரை பாகிஸ்தான் 86 போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட ரன்களை  குவித்துள்ளது. அதில், 69 வெற்றிகளை பெற்ற நிலையில், 17ல்  தோல்விகளை தழுவியது.

3ஆவது இடத்தில் தென்னாப்பிரிக்கா : 87

தென்னாப்பிரிக்க அணியில் ஜாக் காலிஸ், கிரீம் ஸ்மித், ஏ.பி.டி வில்லியர்ஸ், ஹசிம் அம்லா உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் இந்த அணியும் 300க்கு மேல் அதிக முறை எடுத்து இருக்கிறது. ஒருமுறை  ஆஸ்திரேலியா நிர்ணயம் செய்த 438 ரன்களை சேசிங் செய்து உலக சாதனை படைத்திருக்கிறது. அந்த வகையில் இதுவரை வரலாற்றில் 87 போட்டிகளில் 300க்கும் மேல் ரன்களை அடித்திருக்கிறது அந்த அணி. அதில் வெறும் 8 போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது. 78ல் வென்று அசத்தியிருக்கிறது. எனவே 300க்கு மேல் அடித்தால் அந்த அணி கிட்டத்தட்ட வெல்லும் வாய்ப்பை அதிகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

2ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா : 113

ஒரு நாள் போட்டியில் நாங்க தான் கெத்து என்று சொல்லக்கூடிய அளவில் 5 உலகக் கோப்பையையும் அசால்டாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா. ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற எண்ணற்ற அதிரடி வீரர்கள் அசால்ட்டாக 300 ரன்களை குவிக்க உதவியிருக்கின்றனர். ஒரு காலத்தில் பலமான அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். இப்போதும் அந்த அணி பலம் தான்.. இந்த அணி 113 போட்டிகளில் 300 ரன்கள் கடந்துள்ளது. இதில் 17 மட்டுமே தோற்றுள்ள அந்த அணி 95 போட்டிகளில் வென்று அசத்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

முதலிடத்தில் இந்திய அணி : 122

இந்திய அணியில் பந்துவீச்சாளர்களை விட பேட்டிங்கில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.. அந்த காலத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கங்குலி, ராகுல் டிராவிட் தொடங்கி, தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என அடுத்தடுத்து புதுப்புது சூப்பர் வீரர்கள் உருவாகி வருகிறார்கள்.. எனவே இந்திய அணி 300 ரன்களை அசால்டாக எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.. அந்த வகையில் கிரிக்கெட் வரலாற்றில் 122 போட்டிகளில் 300 ரன்கள் குவித்துள்ள இந்திய அணி உலக சாதனை படைத்துள்ளது. அதில் வெறும் 26 தோல்விகளை மட்டும் பதிவு செய்த அந்த அணி 93 போட்டியில் வெற்றி மகுடத்தை சூடி இருக்கிறது.. பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *