ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்துட்டீங்க…. முதலமைச்சர் பிரச்சாரத்தில் கருப்புக் கொடி பிடிக்க முயன்ற சீர்மரபினர் சங்கம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவரவர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் தச்சை கணேசராஜா என்பவர் அதிமுக சார்பில் வேட்பாளராக நிற்கிறார்.

இவரை ஆதரிக்கும் விதமாக நாங்குநேரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பாக வன்னியர்களுக்கு ஒருதலைப்பட்சமாக இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து கறுப்புக்கொடி தூக்கி போராட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் கருப்புக் கொடி காட்ட முயன்ற 7 பேரை கைது செய்துள்ளார்கள்.