ஒருங்கிணைப்பாளர் நான் தான்…. கெத்து காட்டிய ஓபிஎஸ்….. பரபரப்பு கடிதம்….!!!

தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது .ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினை சேர்ந்த ஆதரவாளர்கள் கருத்துப் போர் நடத்தி வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இபிஎஸ் தரப்பினர் 23 தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றாத காரணத்தினால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் தனது பெயருக்கு கீழ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் நீங்கள் ஒருங்கிணைப்பாளரே இல்லை என்று குறிப்பிட்டு இருந்த நிலையில், தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று மீண்டும் ஓபிஎஸ் குறிப்பிட்டு இருப்பது கட்சி வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.