ஒமைக்ரான் எதிரொலி: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் நிலையை பரிசோதித்து அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவேண்டும். பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூடவேண்டும். இறைவணக்க கூட்டம், விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *